கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு! தமிழ் ஆசிரியர்களின் கல்வித்தகுதியில் தளர்வு!

தமிழ் ஆசிரியர்களுக்கான கல்வி தகுதிகளில் கல்வி துறையானது தளர்வுகளை அறிவித்து புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகள் கல்வி நிலையங்களுக்கான ஆசிரியர்களை தகுதி தேர்வு நடத்தி பணிக்கு தேர்வு செய்கிறது. மேலும் குறிப்பிட்ட கல்வி தகுதியை பெற்றிருத்தல் மட்டுமே விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஆசிரியர் பணியில் அவர்களால் சேர முடியும். அந்த வகையில் கேரளா மாநிலத்தில் கல்வித்துறை தமிழ் வழி கல்வி பள்ளிகளுக்கான தமிழ் ஆசிரியர்களின் கல்வி தகுதியை தற்போது தளர்த்தியுள்ளது.

TAMILNADU TEACHER

ALSO READ :10th, 12th, Diploma படித்திருந்தால் போதும்! ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு!

இதற்கு முன்னர் கேரள கல்வி வாரியத்தின் தமிழ் ஆசிரியராக பணியாற்ற சில வரைமுறை இருந்தது . அது என்னவென்றால் தமிழ் ஆசிரியராக பணியாற்ற தமிழ் மொழியில் பிஇ பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். கேரள கல்வி துறை அதில் சில தளர்வுகளை கூறியுள்ளது. அதாவது, கல்வி முதன்மை செயலாளரின் உத்தரவுப்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் இரண்டாம் மொழியாக படித்தவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம், பிஇ, கே டெட் தகுதிகளை பெற்றவர்களும் தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது. கேரள கல்வி துறையின் இந்த முடிவு ஆசிரியர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top