Home NEWS சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக 4,000 பேர் பணி…! விமான நிலைய அதிகாரி தகவல்

சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக 4,000 பேர் பணி…! விமான நிலைய அதிகாரி தகவல்

0
An additional 4,000 people work at the Chennai airport Airport Authority Information-Appointment Of 2 Private Agencies In Addition To Air Service Job

சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்துள்ளதால் சென்னையில் அனைத்து விமான சேவைகளும் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் அதிக அளவில் விமானங்களும் செயல்பட தொடங்கியதால் பயணிகளின் கூட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் தரைத்தள பயநிகளின் உடமைகளை கையாள்வது மற்றும் விமானங்கள் தரை இறங்குவது, புறப்படுவது போன்றவற்றை தற்பொழுது ஒரு தனியார் நிறுவனம் கையாண்டு வருகிறது.

இந்நிலையில், தற்பொழுது சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விமானம் தரையிறங்குவது, புறப்படுவது மற்றும் பயணிகளின் உடமைகளை கையாள்வது போன்ற பணியினை மேற்கொள்ள புதிதாக மேலும் 2 தனியார் ஏஜென்சிகளை இந்திய விமான நிலைய ஆணையகம் நியமித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, இந்திய விமான நிலைய ஆணையகம் நியமித்த 2 ஏஜென்சிகளும் மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களில் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது அவர்களையே சென்னை விமான நிலையத்துக்கும் நியமித்துள்ளனர். இது குறித்து சென்னை விமானநிலைய அதிகாரி கூறுகையில், இனி விமான நிலையத்தில் உள்ள தரத்தள பணிகள் மிக சிறப்பாக செயல்படும் என்றும் உடமைகளை கையாள பயணிகள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

மேலும், சென்னை விமான நிலையத்தில் தரைத்தள பணிகளை மேற்கொள்வதற்கு சுமார் 4,000 பேரை பணி அமர்த்த போவதாக தெரிவித்துள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here