திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு!
156 அலுவலக உதவியாளர் பணிக்காக!
திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக்காவலர், முழு நேர மசால்சி, துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மைபடுத்துபவர், சுகாதார ஊழியர் பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது.
இது பற்றிய விபரம் பின்வருமாறு:
நிறுவனத்தின் பெயர்: திருப்பூர் மாவட்ட நீதிமன்றம்
அமைப்பு: தமிழக அரசு
பதவி: பல்வேறு பணிகள் (ஓட்டுநர், அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக்காவலர், முழு நேர மசால்சி, துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மைபடுத்துபவர், சுகாதார ஊழியர் ect.,)
காலியிடங்கள்: 156
கல்வித்தகுதி: 8ம்,10ம் வகுப்பு தேர்ச்சி, இளநிலை பட்டம்
சம்பளம்: Rs.19,500 – 62,000/-
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பம் தொடக்க நாள்: 29.05.2019
விண்ணப்பம் முடியும் நாள்: 13.06.2019
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் வலது பக்கத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களது புகைப்படம் ஒட்டப்பட்டு சுய சான்றிட்டு இணைக்கப்பட்ட உரிய சான்றிதழ்களுடன் 13-06-2019 தேதி மாலை 5.00 மணிக்குள் தபால் மூலம் மட்டுமே பின்வரும் முகவரிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முதன்மை மாவட்ட நீதிபதி
திருப்பூர் மாவட்ட
திருப்பூர்– 641 602.
ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் இணையத்தளத்தைப் பார்வையிடலாம். இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://districts.ecourts.gov.in/recruitment-filling-vacancies-various-posts-courts-tiruppur-district-0 என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஜூன் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.
திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்யவும்
திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்