1 லட்சம் அபராதமா? அதிர்ச்சியில் காவலர்கள்!

1 lakh fine Guards in shock-Police Officer Fined With 1 Lakhs

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் காவல் நிலையத்தில் சிலைமணி என்பவர் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். அப்பொழுது அவர் போக்குவரத்து விதிகள் தொடர்பாக சாலைகளில் உள்ள வாகனங்களை விசாரித்து வந்துள்ளார். அந்த நிலையில், காரில் சென்ற வக்கீல் ஒருவரை ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதாக கூறி அவர் மீது போய் வழக்கு போட்டதால் அந்த காவல் ஆய்வாளருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதத்தை விதித்துள்ளது.

சிவன் ராஜ் என்பவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி காரில் சென்று கொண்டிருக்கும் போது அவரை வழிமறித்த காவல் ஆய்வாளர் சிலைமணி, சிவன் ராஜ் என்பவர் மீது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதாக சொல்லி பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாம் அவரோடு பயணித்த சிவன் ராஜின் நண்பரான முகம்மது யாசிர் என்பவரையும் காவலர் வெறித்தனமாக தாக்கினார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையத்தில் இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் சிவன் ராஜ் வழக்கு பதிவு தொடர்ந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் காவல் ஆய்வாளர் சிலை மணி செய்த செயல் மனித மற்றும் சட்ட விதிமுறை மீறலுக்கு உட்பட்டது என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் காவல் ஆய்வாளர் சிலை மணி அவர்களுக்கு 1 லட்சம் ரூபாயை அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்தார். இது காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here