மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று களைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த மகளிர் உரிமை திட்டம் ஆனது, “பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்” வகையில் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை கடந்த மாதம் 24 ஆம் தேதியில் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார்.

1000 per month entitlement for daughters Tamil Nadu government has released an important announcement read now

இதைதொடர்ந்து, விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடத்தப்பட்டன. முதற்கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்றது. இந்த விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில், இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை நடைபெற்றன. இந்த இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59.86 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை மொத்தம் 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.

Also Read : என்னது இனி இன்டர்நெட் இல்லாமலேயே PhonePe, Gpay மூலம் பணம் அனுப்பலாமா..? எப்படின்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க…

இதனையடுத்து, இந்த இரண்டு கட்ட முகாமிலும் உரிமை திட்ட விண்ணப்பங்களை தவறியவர்களுக்கு இன்று முதல் 20 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நியாய விலை கடைகளுக்கு சென்று விண்ணப்படிவத்தை பெற்று முகாம்களுக்கு சென்று உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.