பொங்கலுக்கு 1000 ரூபாய்..! வேற என்னலாம் தராங்கனு தெரியுமா?

1000 rupees for Pongal Do you know what else they can give-To Pay Pongal Cash RS.1000 In Ration Shop

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்து ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பொருட்களின் எடை, தரம் மற்றும் வெல்லம் போன்றவை முறையாக வழங்கப்படாததால் அரசு மீது நிறைய விமர்சனங்கள் வந்தது. இதனால் வரும் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்க பணம் மற்றும் பச்சரிசி, சக்கரை, முந்திரி, ஏலக்காய், நெய் உள்ளிட்ட பொருட்களையும் ரேஷன் கடைகளில் வழங்கலாமா? என அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கப் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து வங்கி என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்னும் முழுமையாக முடிவடையாததால் இனி ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறவில்லை என்று தெரிகிறது.

மேலும், இதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பு எதுவும் அரசு தரப்பில் இருந்து வெளியிடவில்லை. இது குறித்த அரசாணையை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here