தமிழ்நாடே தற்பொழுது பரப்பரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் ஒரு விஷயம் தான் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம். இந்த திட்டமானது வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக கடந்த சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்பொழுது அதற்கான பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் முதலே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம்களை தமிழகம் முழுவதும் அரசு நடத்தியது. இந்த சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இத சிறப்பு முகாம்கள் மூலம் சுமார் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களின் உண்மைத் தன்மையை அறிய அதிகாரிகள் விண்ணபத்தாரர்களின் வீடுகளுக்கே சென்று சரிபார்ப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Also Read : தேமுதிக தலைவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் – முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
அதாவது, விண்ணப்பதாரர்களுக்கு சொந்த வீடு உள்ளதா? இல்லை வாடகை விடா? சொந்த கார் வைத்துள்ளார்களா? சொந்த நிலம் உள்ளதா? உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர். இந்த கள ஆய்வுக்கு பின் தகுதியான குடும்பத் தலைவிகளின் முதல் பட்டியியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.