தமிழ்நாடு அரசின் தீவிரம்… வெள்ள நிவாரண தொகையை தொடர்ந்து பொங்கலுக்கு 1000 ரூபாய் பரிசு! வெளியான புதிய தகவல்!

1000 rupees prize for Pongal following the flood relief! New information released at government of tamil nadu

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த நிலையில் பொங்கல் பாரிசாக 1000 ரூபாய் வழங்க ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்களும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வந்ததது. அது மட்டும் இன்றி பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெள்ளம், சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களும் ரேசன் கடை மூலமாக வழங்கப்பட்டது. எனவே அடுத்த மாதம் பொங்கல் வர இருக்கும் நிலையில் மக்கள் பொங்கல் பரிசு பொருட்களை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

ALSO READ : மிகவும் முக்கிய அறிவிப்பு! சற்றுமுன் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

ஆனால் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டு 6000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொங்கல் பரிசுடன் ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை வழங்குவதற்கு உணவுத்துறை ஏற்பாடு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top