சூப்பர் ஜான்ஸ்! 10th, 12th, Bachelor Degree படிச்ச எல்லாருமே அஞ்சல் துறை வேலைக்கு! மொத்தமா 1899 காலியிடங்கள் இருக்காம்!

இந்திய அஞ்சல் துறையில் வேலை செய்திட யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் மத்திய அரசு வேலை செய்ய எல்லாரும் விரும்புவார்கள்! ஆர்வமுள்ளவர்கள் இந்திய அஞ்சல் துறை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விரையுங்கள். கல்வித்தகுதி, பணியிடம், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் வழங்கியுள்ளோம்.

இந்தியா போஸ்ட் வேலைவாய்ப்பு விவரங்கள்

10th, 12th, Bachelor Degree holders can apply India Post Jobs
10th, 12th, Bachelor Degree holders can apply India Post Jobs

இந்திய அஞ்சல் துறையில் வேலை செய்ய விருப்பம் இருக்கவங்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 10th, 12th, Bachelor Degree படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், MTS, Postman, Sorting Assistant, Mail Guard, Postal Assistant பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. மொத்தமாக 1899 காலியிடங்கள் உள்ளதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த அரசு பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். நீங்கள் ஈஸியா விண்ணப்பிப்பதற்கு எதுவாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் Postal Assistant, Sorting Assistant, Postman, Mail Guard பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Multi Tasking Staff (MTS) பணிக்கு 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Women candidates, Transgender candidates, SC/ST/PWD/Ex-Serviceman இவர்கள் அனைவரும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைவரும் 100 ரூபாய் மட்டும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

மத்திய அரசு சம்பளமாக மாதந்தோறும் 18,000 ரூபாய் முதல் 81,100 ரூபாய் வரை பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பிக்கும் நபர்களை Merit List, Medical Examination, Document Verification முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆகவே, விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் 10/11/2023 முதல் 09/12/2023 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்திய அஞ்சல் துறை வேலைக்கு Notification லிங்கை கவனமுடன் படித்து Apply லிங்கில் விண்ணப்பிக்க விரையுங்கள்! கொட்டிகிடக்கும் மத்திய அரசு வேலை உங்களுக்காக!

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top