10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..! இணையத்தில் வைரல்!!

10th class public examination students and teachers incident Viral on the Internet

தமிழக பள்ளிக்கல்வியில் இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (ஏப்.6) தொடங்கி ஏப்.20 வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வில் மாணவர்களின் கண்காணிப்பிற்காக ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

இந்நிலையில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவிகள் தேர்வுக்கு செல்லும் முன் ஆசிரியர்கள் மற்றும் இறைவனை வணங்கி சென்றனர். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இறைவனுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டு மாணவிகளை தேர்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN