அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

TNPSC என்றால் என்ன?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC-Tamil Nadu Public Service Commission) என்பது தமிழ்நாடு அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். TNPSC இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையம். 1929-யில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission. மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957-யில் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சென்cனையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது. தமிழக அரசால் ஏற்படுத்தப் பெற்ற இத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது.

TNPSC வரலாறு:

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
இணையதளம் www.tnpsc.gov.in
உருவாக்கம் 1929
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
பணியிடம் தமிழகம் முழுவதும்
அமைவிடம் Frazer Bridge Road, VOC Nagar, Park Town, Chennai-600003, Tamil Nadu.
தலைமையகம் சென்னை
தலைவர் Dr. K. Arulmozhi, I.A.S. (R)
செயலாளர் K Nandhakumar, IAS
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் R. Sudhan, IAS

டி.என்.பி.எஸ்.சி குழு தேர்வு 2020 விவரங்கள்:

Sarkari Naukri in Tamilnadu State / TNPSC Govt Jobs 2020

இன்றைய இளைஞர்கள் சவாலான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அரசு வேலை வாய்ப்பு என்பது இளைய சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கனவாக இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் ஊதியத்தை எந்த அளவுக்குக் கொட்டிக் கொடுத்தாலும் அரசுப் பணி மீதான ஆர்வம் யாருக்கும் குறையவில்லை.

டி.என்.பி.எஸ்.சி-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு வகையான அரசு வேலைகளுக்கு தேர்வுகள் நடத்த உள்ளது. குரூப் IV, குரூப் II, குரூப் IIA, குரூப் I, வி.ஏ.ஓ தேர்வுகள் நடைபெறும். டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் பற்றிய விரைவான தகவல்களை இங்கு வழங்குகிறோம்.

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker