111 ஆண்டு பழைமையான டைடானிக் கப்பல்..! வெளியான வைரல் வீடியோ!

111 year old Titanic ship Released viral video-Rare Footage For Titanic

கடந்த 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட டைடானிக் கப்பல் சுமார் ஆயிரத்து 500 பயணிகளுடன் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் என்ற பகுதிக்கு தன் முதல் பயணத்தை ஆரம்பித்தது. எந்த ஒரு சூழ்நிலையில் இந்த கப்பலுக்கு எதுவும் ஆகாது ஏன் கடவுளே நினைத்தாலும் கூட இந்த கப்பலை கவிழ்க்க முடியாது என்று சொல்லி டைடானிக் கப்பலின் கேப்டன் தன் பயணத்தை ஆரம்பித்தார்.

இந்நிலையில், இந்த டைடானிக் கப்பலானது தன்னுடைய முதல் பயணத்தை நிறைவு செய்யாமல் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி பெரிய பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதையடுத்து, இந்த கப்பல் குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்ள 1985 ஆம் ஆண்டு உட்ஸ் ஹோல் ஓஷியானிக் நிறுவனம் பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து குழு அமைத்து அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

டைட்டானிக் கப்பல் குறித்த ஆராய்ச்சியானது 1986 ஆம் ஆண்டு சுனில் நிறைவு பெற்றது. அந்த ஆராய்ச்ச்யின்போது எடுக்கப்பட்ட எந்தவொரு வீடியோ காட்சியும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டைடானிக் என்ற படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது ஆராய்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here