மழை, வெள்ள பாதிப்பால் இன்று 12 ரயில்கள் ரத்து..! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

12 trains canceled today due to rain and flood announcement issued by the Railway Administration

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழக தென்மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களும் நெல்லை, தூத்துக்குடி , கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில் பாதைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக தண்டவாளங்கள் சேதமடைந்து காணப்படுவதால் அதனை சீரமைக்கும் பணி தற்பொழுது ரயில்வே பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை ஓய்ந்த நிலையிலும் தொடர்ந்து ரயில் தண்டவாளங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ALSO READ : தொடர் விடுமுறையால் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா..? சற்றுமுன் வெளியான் புதிய தகவல்!!

இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியானது இன்றளவிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை ஆகிய விரைவு ரெயில்கள் உட்பட 12 ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top