இந்தியாவின் முதல் ஜனாதிபதியின் 138-வது பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

138th Birthday of India's First President - PM Modi Wishes-Dr Rajendra Prasad Birthday

இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138-வது பிறந்தநாள் டிசம்பர் 3 ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இவர் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் 1962 ஆம் ஆண்டு மே 13-ம் தேதி வரை நாட்டின் முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார்.

இந்நிலையில், டாக்டர் ராஜேந்திர பிரசாத் மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தார். இன்று ராஜேந்திர பிரசாத்தின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்தார். அந்த பதிவில், ராஜேந்திர பிரசாத் ஒரு பழம்பெரும் தலைவர், அவர் தைரியத்தையும் அறிவார்ந்த ஆர்வத்தையும் சிறந்த முறையில் வெளிபடுத்தி இந்தியாவை பெருமைப்படுத்தினார். மேலும், இந்தியாவின் கலாச்சாரத்தில் உறுதியாக, வளர்ச்சிக்கான எதிர்கால பார்வையையும் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here