19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் : கடலோர பகுதிகளில் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!

19th Tsunami Remembrance Day People in coastal areas pay tearful tributes

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதன் காரணமாக கடலில் இருந்து 30 மீட்டர் உயரத்துக்கு சுனாமி எழுந்து 14 நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளை தாக்கியது. இந்த சுனாமியானது வயது வித்தியாசம் கூட பார்க்காமல் அனைவரையும் வாரி அள்ளி தனக்குள் போட்டது. இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதில் 43 ஆயிரத்து 786 பேரை காணாமல் போய்விட்டனர்.

ALSO READ : புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..! சவரன் ஒன்றுக்கு ரூ.120 உயர்ந்ததால் பொதுமக்கள் வேதனை!!

தமிழகத்தை பொறுத்தவரை சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுனாமியில் சிக்கி இறந்தனர். இதில் அதிகபட்சமாக நாகப்பட்டின மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியாகியுள்ளனர். கடலோரப்பகுதிகளில் ஏற்பட்ட சுனாமியானது உயிர் பலியையும் தாண்டி பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்சேதங்களை ஏற்படுத்தியது. சுனாமியின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு நாடுகளையே கலங்கடித்த இந்த சுனாமி என்னும் இயற்கை பேரழிவின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று(செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள் அமைதி பேரணியாக சென்று கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top