பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

2200 special buses run for the opening of schools full details here

தமிழகத்தில் தற்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வருகின்ற ஜூன் 7 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் பொது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் முன்னர் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டிருந்தன. அதாவது கோடைவிடுமுறை முடிந்து மாணவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக இந்த ஏற்பாடுகளை போக்குவரத்துத் துறை செய்து வருகிறது.

அதையடுத்து வார இறுதி நாட்களின்போது முக்கிய இடங்களிலிருந்தும் தமிழகம் முழுவதுமாக மொத்தம் 2,200 சிறப்புப் பேருந்துகளை இயக்கப்படவுள்ளது. அதாவது, சென்னைக்கு 900 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் 1300 சிறப்பு பேருந்துகளை திருச்சி, கோவை, சேலம் மற்றும் மதுரை உள்பட பல மாவட்டங்களிலிருந்து பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் இயக்க திட்டமிட்டிருக்கின்றது. இதன் மூலம் தொலைதூர பயணத்தை மேற்கொள்பவர்கள் முன்பதிவுடன் பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதுமான அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் முன்பதிவு செய்யப்படாத பயணிகளின் தேவைக்கேற்றவாறு கூடுதல் பேருந்துகளை திருச்சி மற்றும் மதுரையிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனையடுத்து மேலாண் இயக்குநர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பாக பொதுமக்கள் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தகவல் வெளியாகிஉள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN