2,748 கிராம உதவியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

2748 Village Assistant Exam Hall Ticket Released: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு 4 டிசம்பர் 2022 தேதி நடைப்பெறவுள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2748 Village Assistant Exam Hall Ticket Released
2748 Village Assistant Exam Hall Ticket Released

இப்பணிகளுக்கு நவம்பர் 30 தேதி எழுத்துத் தேர்வு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிசம்பர் 4 ஆம் தேதி தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கத் தேவையான தகுதி 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 21 வயது நிறைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் விண்ணப்பதார்களுக்கு குறுஞ்செய்தியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் கிராம உதவியாளர் பணிகான தேர்வு நுழைவு சீட்டை https://www.tn.gov.in/ என்ற இணையத்தளத்திலும் https://cra.tn.gov.in/ என்ற இணையத்தளத்திலும் மேலும் அந்தந்த மாவட்ட இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here