320 அப்ரண்டிஸ் காலியிடங்களை அறிவித்துள்ளது HVF ஆவடி..! நம்ம சென்னையிலேயே வேலை செய்யலாம்!

320 Apprentice Job Openings for HVF Avadi

கனரக வாகன தொழிற்சாலை, ஆவடியில் 320 அப்ரண்டிஸ் காலிப் பணிகள் உள்ளன. இவ்வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். இந்த அரசாங்க வேலை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

HVF ஆவடி காலியிட விவரங்கள்

தற்போது வந்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, Graduate Apprentice பணிக்கு 110 காலியிடங்களும், Technician Apprentice பணிக்கு 110 காலியிடங்களும், Non Engineering Graduate Apprentice பணிக்கு 100 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

HVF ஆவடி கல்வித் தகுதி விவரங்கள்

  • Graduate Apprentice பணிக்கு Degree in Engineering/ Technology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Technician Apprentice பணிக்கு Diploma in Engineering/ Technology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Non Engineering Graduate Apprentice பணிக்கு Degree in Arts/ Science/ Commerce/ Humanities, BA, B.Sc, BCA, BBA, B.Com படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) வேலை!

HVF ஆவடி சம்பள விவரங்கள்

  • Graduate Apprentice பணிக்கு 9 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.
  • Technician Apprentice பணிக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.
  • Non Engineering Graduate Apprentice பணிக்கு 9 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.

வேலை பற்றிய மற்ற விவரங்கள்

இந்த மத்திய அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் கட்ட வேண்டாம். விண்ணப்பதாரர்களை Based on Merit, Interview முறையில் ஆட்சேர்ப்பு செய்கிறது HVF ஆவடி. வருகிற டிசம்பர் மாதம் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி முடிந்த பிறகு பெறப்படும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே கவனமுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை அறிய HVF Avadi Official Notification-ல் அறிந்து கொண்டு, HVF Avadi Apply Online Link-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top