சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்..! இதுதான் காரணம்!

5 layers of security in Chennai This is the reason-In Republic Day Celebration

26 ஜனவரி இந்தியாவின் 74-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் இந்திய ஜனாதிபதிக்கு முன் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தின அணிவகுப்புகளை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.

குடியரசு தினவிழாவையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையங்கள், நாட்டின் எல்லைகள், மக்கள் கூடும் பகுதிகளில், ரயில் நிலையங்கள் என பல பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பல இடங்களில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை, காமராஜர் சாலை-வாலஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 6,800 போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here