பள்ளி மாணவர்கள் 62 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்..!

62 school students affected by Nora virus Shocking information-Norovirus Cases Reported In Kerala

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வரும் ஒரு சில மாணவர்களுக்கு தீடிரென்று வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது. இது பற்றி பள்ளி நிர்வாகம் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தது.

இந்நிலையில், தகவல் அறிந்து வந்த சுகாதாரத்துறையினர் அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த மாணவர்களிடம் மேற்கொண்ட பரிசோதனையில், சில மாணவர்களின் பெற்றோர்களுக்கு நோரா பாத்திப்பு இருந்ததால் அதன் மூலம் இந்த மாணவர்களுக்கும் பரவி இருக்கலாம் என்று தெரியவந்தது.

இந்த சூழ்நிலையில், அந்த பள்ளிகளில் நோய் அறிகுறிகளுடன் காணப்பட்ட மொத்தம் 62 மாணவர்களை தனிமை படுத்தி அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவை பொது சுகாதார ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் 2 மாணவர்களுக்கு நோரா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நோரா வைரஸானது அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். வீடுகளில் குளோரின் கலந்த குடிநீரையே பயன்படுத்தவேண்டும், பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தும் முன்பு நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும், விலங்குகளுடன் பழகும்போது கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here