சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 65-வது நினைவு தினம்! பிரதமர் மோடி அஞ்சலி

65th anniversary of legal genius Annal Ambedkar Tribute to Prime Minister Modi-Ambedkar Memorial Day

அம்பேத்கர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் சட்ட அமைச்சராக பதவியேற்றார். இவர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் ஆவார். பட்டியலின மக்களுக்காக கழகம் ஒன்றை தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிப்புக்காக போராடியவர். இவரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுவார்கள்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அம்பேத்கரின் நினைவுதினத்தை ஒட்டி பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here