74வது இந்திய குடியரசு தினம் டெல்லி கடமை பாதையில் நடைபெறவுள்ளது!

74th Republic Day 2023 India will be held at Delhi Kartavya path
74th Republic Day 2023 India will be held at Delhi Kartavya path

Republic Day 2023 India: இந்தியர்களாகிய நாம் நமது 74வது குடியரசு தினத்தை இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று கொண்டாடுகிறோம். டெல்லியில் உள்ள கடமை பாதையில் ஆயுதப்படைகள், இந்திய ராணுவ படை, மாநில போலீசார் மற்றும் பலர் அணிவகுப்புக்காக ஒத்திகை பார்த்து வருகின்றனர். இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டங்கள் பிரதமரின் ‘ஜன் பாகிதாரி’ கருப்பொருளை பிரதிபலிக்கும் என்று பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே கூறினார்.

இந்திய குடியரசு தினம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்ஹிந்த்!!!

இந்திய குடியரசு தினம் பொன்மொழிகள்

அடிமைப்பட்டு போன தாய் நாட்டை,
தன் இன் உயிரை துச்சம் என எண்ணி,
போராடி சுதந்திரத்தை பெற்று தந்த
தலைவர்களையும் வீரர்களையும்
நினைவு கூர்ந்து மரியாதை செய்யும்
தினம் தான் குடியரசு தினம்.
குடியரசு தின வாழ்த்துக்கள்

எத்தனை மதம், எத்தனை மொழி,
எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள்,
இருந்தாலும், நாம் அனைவரும்
பாரதத்தாயின் பிள்ளைகள் தான்.
வாழ்க மக்கள்! வளர்க பாரதம்!
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்


RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here