மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய பொதுமக்கள், அரசு அதிகாரிகள், மாணவர்கள் என பலர் ‘நடப்போம் நலம்பெறுவோம்’ எனும் பெயரில் நீண்ட தூரம் நடைபயணம் இன்று கன்னியாகுமாரியில் மேற்கொண்டனர்.
அதன்பிறகு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் 8 கி.மீ தூரம் வரையில் பொதுமக்கள் நடப்பதற்காக மட்டுமே நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

அதேபோல், நடைபாதை தேர்வு செய்யும் பணி தமிழகம் முழுவதும், 38 மாவட்டங்களில் 8 கி.மீ தூரத்திற்கு துவங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர் என்று கன்னியாகுமாரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் கூறினார். அதன்பிறகு, மாவட்டந்தோறும் அமைக்கப்பட உள்ள 8 கிமீ நடைபாதையில், பாதை இரு புறமும் மரங்கள், தூர கணக்கீடு பதாகைகள், ஒவ்வொரு 2 கி.மீ தூரத்திற்கும் இருக்கைகள், ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
Also Read : தங்க பதக்கத்தை தட்டி தூக்கிய நீரஜ் சோப்ரா..! எதற்கு தெரியுமா?
மேலும், ஹெல்த் கேம்ப் ஆனது மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமைகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடத்தப்படும். அப்போது ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், ஆகியோருக்கு இலவச பரிசோதனை, மருத்துவம் வழங்கப்படும். நடை பாதையில் நடப்போருக்கு அரசு சார்பில் கடலை மிட்டாய், குடிநீர், வாழைப்பழம் என சத்தான ஆகாரங்கள் கொடுக்கப்படும். அதன்படி, இன்றைய சோதனை நடைபயணத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடுத்த மாதம் அல்லது அடுத்த மாத கடைசியில் இந்த நடைபாதை திட்டம் தமிழகம் முழுவதும் துவங்கப்படும்.