
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் (TNRD) இரவு நேர காவலர் பணிக்கு ஒரு ஆள் தேவை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு கல்வித்தகுதி 8வது படித்திருந்தால் போதும். பணியிடம் நீலகிரி ஆகும். ஆப்லைன் மூலமாக விண்ணப்பங்கள் 24/11/2023 தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் செல்லாது. இரவு நேர காவலர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் TNRD இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பத்தை பெறலாம்.
ALSO READ : ரூ.51,300-2,80,000 சம்பளத்தில் இந்திய தனித்துவ ஆணையம் (UIDAI) வேலைகள் அறிவிப்பு!
இரவு நேர காவலர் பணிக்கு வயது 18 முதல் 37 வரை மட்டும் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். பெரும்பலான நேரங்களில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஆட்களை சேர்ப்பதற்கு குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் முறையை பின்பற்றுகிறது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை பணிக்கு TNRD அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை கீழ் காணும் முகவரிக்கு அனுப்பவும். மேலும் இதற்கு Official Notification மற்றும் Official Website பார்க்கவும்.