91 லட்சம் கரண்ட் பில்லா? அதிர்ச்சியில் உறைந்து போன பெண்..!

91 lakh current bill per month-Electricity Bill Shocked News

முகமது பாத்து என்பவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர். 40 வயதான முகமது பாத்து தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்து செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதை பார்த்து முகமது பாத்து அதிர்ச்சியடைந்தார். அதில் 2 மாதத்திற்கான மின்கட்டண தொகை 91 ஆயிரத்து 139 ரூபாய் கட்ட வேண்டும் என்றும் இதற்கான கடைசி நாள் 5 ஆம் தேதி என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது.

இந்நிலையில், குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது பாத்து உடனே அருகில் உள்ள நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் முறையிட்டார். அப்போது, அவர் வழக்கமாக எனது வீட்டிற்கு 65 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வரும் என்றும் எங்கள் வீட்டில் மொத்தம் 2 அறைகளில், 2 பல்புகள் மட்டுமே உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த மாதத்திற்கு மின் கட்டணம் 91 ஆயிரத்து 139 ரூபாய் மின்கட்டணம் எப்படி வரும் என்று அதிகாரிகளிடம் புலம்பி தீர்த்தார்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் 2 நாட்களில் உண்மையான கட்டண ரசீது வந்துவிடும் என்றும் கூறி சமாதானப்படுத்தி முகமது பாத்துவை அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நேற்று முன்தினம் முகமது பாத்துவின் செல்போனுக்கு மின்வாரியம் சார்பில் புதிய கட்டணம் குறித்து குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில் மின்கட்டணம் ரூ.122 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பின்னரே அதிர்ச்சியில் இருந்து முகமது பாத்து மீண்டுள்ளார். இந்த சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here