மத்திய அரசு வட்டாரங்கள் சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியா தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சர்க்கரையை தடை விதிக்கும் பட்சத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக விதிக்கப்படும் தடையாக இது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
போதிய மழையின்மையால் கரும்பு சாகுபடி குறைந்த காரணங்களால் அக்டோபர் மாதம் முதல் இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைதொடர்ந்து, உபரி கரும்பில் இருந்து எத்தனாலை உற்பத்தி செய்வதும் மற்றும் உள்ளூர் சர்க்கரை தேவையை பூர்த்தி செய்வதும் தான் தங்களின் முதன்மையான கனவாக இருக்கும் என்பதால் ஏற்றுமதிக்கான சர்கரையை ஒதுக்க இயலாது என்றும் மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Also Read : உலகக்கோப்பை போட்டிய நீங்களும் பாக்கணுமா..? அப்போ பிசிசிஐ அறிவித்த புதிய அறிவிப்ப உடனே படிங்க…
இதன்படி, கடந்த பருவகாலத்தில் சாதனை அளவாக 1.11 கோடி டன் சர்க்கரையை விற்க அனுமதியளித்தது. அதன்பிறகு நடப்பு பருவகாலத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 61 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், 2023-24 நடப்பு பருவத்தில் இந்திய சர்க்கரை உற்பத்தி 3.30 சதவீதம் குறைந்து, 3.17 கோடி டன்னாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது .