மக்களே ஒரு குட் நியூஸ்..! நாளை முதல் பொங்கல் பரிசு! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

A good news folks.. Pongal gift from tomorrow Chief Minister M.K. Stalin-Pongal Gift Program Inaugurated By CM MK Stalin

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ள நிலையில், கடந்த 4ம் தேதி முதல் அதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை, விநியோகிக்கும் பணியில் இன்றும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இன்றுடன் இந்த பணிகள் நிறைவடைய உள்ளதால், இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கனை பெறாதவர்கள், அந்தப்பகுதி ரேஷன் கடை ஊழியரை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

ரேஷன் கடை ஊழியர்கள் பயனாளர்கள் மூலம் வழங்கும் டோக்கனில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிட்டப்பட்டிருக்கும். நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. பொதுமக்கள் பொங்கல் பரிசினை பெற ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் கூடுவதை தவிர்க்க, டோக்கன் முறை பயன்படுத்தப்படுகிறது.

மேலும், டோக்கன் விநியோகம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பொங்கல் பரிசு விநியோகத்தை தொடங்கி வைக்கின்றனர்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here