10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பு!

0
A good news for 10th and 12th class students An important announcement issued by the Department of Education-10th And 12th Class General Examination Date Released

கேரளாவில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான 10-வது மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை தேதியை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட பொதுத்தேர்வு அட்டவணைப்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2023-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது. மேலும், 10-ஆம் வகுப்புக்கான மாதிரித்தேர்வுகள் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கி மார்ச் 3-ம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 29 ஆம் தேதி முடிவடைவதால் இதற்கான விடைத்தாள் திருத்தும்பணி ஏப்ரல் மாதம் தொடங்கி மே 10 ஆம் தேதி இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2023-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது. இதற்கான மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கி மார்ச் 3-ம் தேதி முடிவடைகிறது. ன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் மே 25-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் கேரள பொதுக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here