தமிழகத்தில், 12-வது முடித்தவர்கள் என்ஜினீயரிங் படிப்புக்களுக்காக விண்ணப்பித்திருந்தன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த ஆன்லைன் கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், 3 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 533 இடங்கள் உள்ள நிலையில் 3 சுற்று கலந்தாய்வுக்கு பின் இதுவரை 58 ஆயிரத்து 307 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கான பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, என்ஜினீயரிங் படிப்புக்கான 4-வது சுற்று கலந்தாய்வுக்கு மொத்தம் 61 ஆயிரத்து 771 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதற்கான கால அவகாசமும் (கடந்த மாதம் 29, 30, 31 ) வழங்கப்பட்டது. இறுதியில், 36 ஆயிரத்து 57 பேருக்கு என்ஜினீயரிங் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் அதற்கான அறிமுக வகுப்புகளை வரும் 14 ஆம் தேதியே நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS
- TNPSC GROUP 4 தேர்வர்களே! மகிழ்ச்சியான செய்தி! குரூப் 4 ரிசல்ட் வந்தாச்சு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு @ tnpsc.gov.in
- நீங்க 12th தான் படிச்சிருக்கீங்களா? 200 பணியிடங்கள்! IGNOU பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி!
- முன் அனுபவம் இல்லாதவங்களுக்கு CMC வேலூரில் வேலை! மாதம் ரூ.120000 வரை சம்பளம்!
- ராகுல்காந்தி பதவிநீக்கம்..! இதுதான் காரணமா? மக்களவை செயலகத்தின் அதிரடி அறிவிப்பு!!
- ISRO பணிபுரிவது உங்கள் கனவா? – அப்போ இந்த பதிவு உங்களுக்கானது! மாதம் ரூ.142400 சம்பளத்தில்….