மக்களுக்கு ஒரு குட் நியூஸ்…! நாளை முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 தராங்களாம்! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

0
A good news for people Rs.1000 will be given to ration card holders from tomorrow Notification of District Collector-Ration Card Holders To Get Relief

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்துள்ளது.

கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளையும், ஆயிரக்கணக்கான விளை நிலங்களையும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பின்னர் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வரின் உத்தரவின் பெயரில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நாளை முதல் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடையில் ரூ. 1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here