மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு குட் நியூஸ்! உதவித்தொகை உயர்வு! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

A good news for people with disabilities Scholarship Hike Chief Minister M.K. Stalin's announcement-Scholarship High For Physically Challenged Persons

இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை கொண்டாடுவதற்கு ஏதுவாக சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டும், மாற்றுத்திறனாளிகள் சேவையினை ஊக்குவிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கப்பட்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என திமுக அரசு செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் மற்ற தரப்பினர் பெறக்கூடிய அனைத்து வசதிகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற வேண்டும். அவர்களுக்கு எந்த குறையும் இல்லாதப்படி பார்ப்பதே இந்த அரசின் நோக்கம். மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள அன்பு பாதையால் கிடைக்கும் நன்மை. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் அடைந்த மகிழ்ச்சியால் நானும் மகிழ்ந்தேன் என்று கூறினார்.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதிய உயர்வுத் தொகை ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியம் உயர்வு மூலம் 4.39 லட்சம் மாற்று திறனாளிகள் பயன்பெறுவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here