ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!!

A good news for ration card holders Minister Udayanidhi Stalin's flamboyant announcement

ரேசன் கார்டுகளை வைத்து ரேசன் கடைகளில் பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால் தற்பொழுது ரேசன் கார்டுதாரர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொலைந்து போன அல்லது திருத்தும் செய்த புதிய ரேஷன் கார்டுகளை இனி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்று கொள்ளும் வசதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பெரும்பாலும் புதிய ரேஷன் கார்டை ஆன்லைனில் பதிவு செய்தாலும் அதனை வட்ட வழங்கள் அலுவலகம் சென்றுதான் பெற வேண்டியுள்ளது. இதனை எளிதாக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய இணையதள வசதியினை நேற்று தொடங்கி வைத்துள்ளார்.

இந்த புதிய வசதி மூலம் தொலைந்து போன ரேஷன் கார்டு அல்லது பெயர் மாற்றம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கு விண்ணப்பிம் செய்யும் நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டு உங்கள் வீடு தேடி வரும். இந்த வசதியானது https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் பெற்று கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூ.20 மற்றும் தபால் மூலம் ரேஷன் கார்டை நீங்கள் பெற ரூ.25 என மொத்தம் ரூ.45 மட்டும் செலுத்தினால் போதும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN