மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! மீண்டும் சைக்கிள், லேப்டாப் குடுக்குறாங்கலாம்!

0
A good news for students Cycle and laptop again-CM Rangasami Announcement To Student For Cycle And Laptop

குழந்தைகள் தின விழா நேற்று இ.சி.ஆர் பகுதியில் அமைந்துள்ள காமராஜ் மணிமண்டபத்தில் பள்ளி கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்பொழுது அவர் பேசுகையில், இந்தியாவை வளர்ச்சி மிக்க நாடக மாற்றுவதற்கு கல்வி தான் மிக சிறந்த வழியாக இருக்கும். எனவே அத்தகைய சிறந்த கல்வியை வழங்குவது அரசின் கடமை என்றும் அதனை சிறப்பாக புதுச்சேரி அரசு வழங்கி வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

மாணவர்கள் நன்றாக படித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பெருமை படுத்த வேண்டும். இந்நிலையில், புதுச்சேரியில் மாநிலத்தில் அதிகளவில் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளதால் மாணவர்கள் எளிதாகவும் அதிக செலவில்லாமலும் படிக்க வழிவகை செய்து வருகிறது.

இதனை தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மீண்டும் இலவச சைக்கிள் வழங்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here