கோவில் பணியாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! முதலமைச்சர் அறிவிப்பு!

A good news for temple workers.. Chief Minister's announcement-Rs 3 Thousand giving For Temple Workers By CM MK Stalin

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருக்கோயில்களில் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தற்போது அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூபாய் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு 01.01.2023 முதல் அகவிலைப்படியை 34% விழுக்காட்டில் இருந்து 38 விழுக்காடாக உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.இதன் மூலம் சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் இதனால் ஆண்டொன்றுக்கு ரூபாய் 7 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

மேலும் அரசு பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவது போல் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி, பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூபாய் 2000 ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணை கொடை இவ்வாண்டில் ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here