மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! கலெக்டரின் அதிரடி அறிவிப்பு!!

A good news for the alternation days Collectors Action Announcement dont miss and read it

தமிழகத்தில் இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருமதி ஆர்த்தி பெண் ஆட்சியராக உள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் மாற்றுத் திறநாளிகளுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்டவைகளை நடக்க இயலாத உடலியிக்க குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் செயற்கை அவயவங்களை நோய் மற்றும் விபத்து போன்றவற்றால் தங்களது கை, கால்களை இழந்தவர்களான மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் காலிப்பர் போன்றவற்றை போலியோவினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும், சிறப்பு சக்கர நாற்காலிகளை மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மேலும் ரொலேட்டர் எனப்படும் நடைப்பயிற்சி சாதனங்களை நடக்க முடியாத மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் வழங்கப்படுகின்றன.

மேலும் தையல் இயந்திரங்களை தையல் பயிற்சி முடித்து தையல் சான்று பெற்ற 18 முதல் 60 வயது வரை இருக்கும் காது கேளாதோர், பார்வை திறனை இழந்தோர் மற்றும் உடலியக்க குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. தொடர்ந்து தையல் இயந்திரங்களை தையல் பயிற்சி முடித்த 75% மற்றும் அதற்கும் மேல் பாதிக்கப்பட்டு மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத் திறனாளிகளுடைய தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்றன. தொடர்ந்து காதொளிக்கருவிகளை காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கும், பிரெய்லி கைக்கடிகாரங்கள் மற்றும் ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்கள் உள்ளிட்டவைகளை பார்வையற்றோருக்காகவும் அளிக்கபடுகின்றது. அதுமட்டுமல்லாது சிறிய எழுத்துகளை பெரிதாக்கி காட்டக்கூடிய உருப்பெருக்கி கருவியை பார்வை குறைபாடுள்ள 9 மற்றும் அதற்கு மேல் வகுப்புகளில் பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

தொடர்ந்து மின்னணு முறையில் ப்ரையிலி எழுத்துக்களை வாசிக்கக்கொடிய கருவியை டி.என்.பி.எஸ்.சி., டெட், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை மேற்கொள்கிற பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் திறன்பேசி சாதனங்களை செவித்திறன் மற்றும் பார்வைத் திறன் இழந்தவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக இவ்வகையான மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் அனைத்தும் அவர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாது இந்த உபகரணங்கள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுதிரனாளிகள் தங்களுக்குரிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 மற்றும் ஆதார் அட்டை நகல்கள் ஆகிவற்றுடன் நேரில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். விவரங்களுக்கு : 044-29998040 என்கிற அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருக்கின்றது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN