Home NEWS குடும்பத் தலைவிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம்! வெளியான தகவல்

குடும்பத் தலைவிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம்! வெளியான தகவல்

0
A good news for the heads of the family 1000 rupees per month scheme Released information-Monthly 1000 Rupees Scheme For Family Womens

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பும் கொரோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போழுது கூட்டுறவுத்துறை இது தொடர்பாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வங்கிகணக்கு தொடங்குவது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது.

இதனை தொடர்ந்து, ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கி கணக்கு இல்லையெனில் உடனே வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்குள் இந்த திட்டம் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது.

RECENT POSTS

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here