தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு குட் நியூஸ்..! வானிலை ஆய்வு மையத்தின் புதிய அப்டேட்!!

A good news for the people of Tamilnadu New Update from Meteorological Center read it now

நாட்டில் சென்ற சில நாட்களில் எல்லாம் பல மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்ததே என கூறப்படுகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது நேற்று முன்தினம் அதாவது மே 11 அன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்றது. இதற்கு “மோக்கா புயல்”என பெயரிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இத மோக்கா புயலானது மேலும் அதி தீவிர புயலாக வலுபெற்றிருக்கிறது. அதனையடுத்து வானிலை ஆய்வு மையமானது வங்காள தேசம் வடக்கு மியான்மர் போன்ற பகுதிகளுக்கிடையே நாளைய தினத்தில் கரையை கடக்க விருப்பதாக அறிவித்துள்ளது.

இதனால் லேசானதிலிருந்து மிதமான மழை வரை தமிழகத்தினுடைய ஓரிரு பகுதிகளில் காணப்படக்கூடும். அதுவுமல்லாது நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மிதமான மழையாக அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையமானது கூறியிருக்கின்றது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN