பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ்..! தமிழ்நாட்டில் புதிதாக 1000 பேருந்துகள்

A good news for the public 1000 new buses in Tamil Nadu-In Tamil Nadu Government Purchase Of 1000 New Bus

மக்கள் தொகை அதிகமாக உள்ள நிலையில், பேருந்துகளில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதனை தடுக்கவே தமிழக அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு தமிழக அரசு முன்னதாகவே மின்சார பேருந்துகளும் மற்றும் சில புதிய பேருந்துகளும் வாங்க உள்ளதாக கூரிய நிலையில் தற்பொழுது புதிய 1000 பஸ்கள் கொள்முதல் செய்ய போவதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 1000 பஸ்கள் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால் வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில், ஒரு பஸ் ரூ.42 லட்சம் என்று மதிப்பீடு செய்து மொத்தம் 1000 பஸ்களுக்கு ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த நிதி ஒதிக்கீடு மாநகர போக்குவரத்து மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து மற்ற கோட்டாக்களுக்கும் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசாணை முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பஸ்கள் அனைத்தும் மண்டலமாக பிரிக்கப்பட்டு, கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பஸ்கள், மதுரை கோட்டத்திற்கு 220 பஸ்கள், விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பஸ்கள், கோவை கோட்டத்திற்கு 120 பஸ்கள், நெல்லை கோட்டத்திற்கு 130 பஸ்கள், சேலம் கோட்டத்திற்கு 100 பஸ்கள் என்று மொத்தமாக தமிழகத்தில் 1000 புதிய பஸ்கள் வாங்க ரூ. 420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here