திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு போறீங்களா? உங்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்..! உடனே பாருங்க!

A good news for those going to Thiruvannamalai Deepatri Festival Watch now-Special Train For Thiruvannamalai Deepam Festival

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணமலையில் நவம்பர் 27 ம் தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி தொடங்கியது . இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். கடைசி நாளான டிசம்பர் 6 ம் நாள் மகதீப திருவிழா நடைபெறும். கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையாரை காண தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம் ஆகையால் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் காலை 6 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 12.30 மணியளவில் திருவண்ணாமலை சென்றடையும் என்றும் மீண்டும் இந்த ரயில் டிசம்பர் 8 ஆம் தேதி வரையிலும் திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் கார்த்திகை தீப திருவிழாவை காண திருவண்ணமலை செல்லும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here