திருவண்ணாமலை தீபத் திருவிழாக்கு போறவங்களுக்கு ஒரு குட் நியூஸ்..! இனி ஈஸியா போகலாம்!

A good news for those going to Tiruvannamalai Deepa festival Let's go easy-Karthigai Deepam Festival Special Train

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணமலையில் நவம்பர் 27 ம் தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி தொடங்கியது . இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். கடைசி நாளான டிசம்பர் 6 ம் நாள் மகதீப திருவிழா நடைபெறும். கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையாரை காண தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம் ஆகையால் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் சென்னை, சேலம், வேலூர் ஆகிய பல நகரங்களில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் ரயில் டிசம்பர் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் திருவண்ணாமலை வரை சிறப்பு ரயிலாக செல்லும் என அறிக்கை வெளியாகி உள்ளது .

இதை போல் கார்த்திகை தீபத்தை காண திருவண்ணாமலைக்கு சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப டிசம்பர் 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் திருவண்ணமலையில் இருந்து சென்னை வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது . தாம்பரத்தில் உள்ள பொது மக்கள் திருவண்ணாமலை சென்றடைய 6 , 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளூர் முதல் கிராமம் வரை அனைவரும் பயன் பெரும் வகையில் அணைத்து நகரங்களில் இருந்தும் 2700 பேருந்துகள் இயக்குவதாக போக்குவரத்துக்கு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் கார்த்திகை தீப திருவிழாவை காண திருவண்ணமலை செல்லும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here