தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விளைவிக்கும் பொருட்களை விவசாயநிலங்களுக்கே சென்று நேரடி கொள்முதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்பொழுது கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்க உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டமானது பட்டாபிராமபுரம், மாம்பாக்கம், பெரியகடம்பூர், கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம் மற்றும் வீரகநல்லுார் ஆகிய கிராமங்களில் உள்ள மொத்தம் 299 விவசாயிகளுக்கு வேளாண் துறையின் மூலம் மானிய விலையில், கடப்பாறை, மம்முட்டி, தாலம், 2 அரிவாள், ஒரு கலைக்கொத்தி ஆகிய பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதன் மொத்த மதிப்பானது ரூ.2,993 ஆகும். இதில் மானியமாக ரூ.1,460 வழங்கப்படும். மீதமுள்ள ரூ.1,533 திருத்தணி வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் செலுத்தி மேற்கண்ட விவசாய கருவிகளை பெற்று கொள்ளலாம்.
இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், மானிய விலையில் விவசாயிகள் கருவிகளை பெறுவதற்கு விவசாயிகள் வேளாண் உதவி அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று ஆன்லைன் மூலம், நிலத்தின் சர்வே, சிட்டா, அடங்கல், விவசாயி போட்டோ மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றிடன் விண்ணப்பிக்க வேண்டும். இதில், அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு அதிலிருந்து விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
RECENT POSTS IN JOBSTAMIL
- பிரைவேட் கம்பெனியில வேலை ரெடி! அப்ளை பண்ண நீங்க ரெடியா? தமிழகத்திலே வேலை செய்யலாம்!
- டிப்ளமோ முடிச்சிட்டு தனியார் நிறுவனத்துல வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வேலை உங்களுக்குத்தான்!
- ரேஷன் கார்டு வச்சிருக்க குடும்பத்துக்குத்தான் இந்த செய்தி! இத உடனே செய்யணுமாம்..!
- கோயம்புத்தூரில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை! பத்தாவது படிச்சிருந்தாலே போதுமாம்!
- தனியார் நிறுவனத்தில் வேலை தேடும் நபரா நீங்கள்? இதோ உங்களுக்கான அருமையான வாய்ப்பு!