மக்களே உங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி..! இனி ஒரு டிக்கெட் போதும் எதுல வேணாலும் போலாம்…

A happy news for you folks Now one ticket is enough-One Ticket Soon To Be Introduced In Chennai

சென்னையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைவரும் பஸ் மற்றும் புறநகர் ரயிலுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், அந்த சூழ்நிலையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் வசிப்பவர்களுக்கு பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் போன்ற அனைத்திற்கும் ஒரே டிக்கெட் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டத்தை மேற்கொள்ள போவதாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளளது.

இந்நிலையில், இதற்கான இறுதிகட்ட நடவடிக்கை பணிகள் தொடங்கியுள்ளது. சென்னையில் ஒரே டிக்கெட் நடைமுறையை மேற்கொள்வதற்காக மத்திய அரசின் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்யூட்டிங் தற்பொழுது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையானது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here