காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது! மழைக்கு வாய்ப்பு!

A low pressure area is forming over Southeast Bay of Bengal today! Chance of rain!

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி! மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் லேசாகவும், மேலும் சில பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.

ALSO READ : உத்தரகாண்ட் சுரங்க விபத்து : மீட்பு பணியில் களமிறங்கிய இந்திய ராணுவ வீரர்கள்!

இந்த நிலையில் இன்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது மேற்கில் இருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழத்தின் ஒரு சில மாவட்டங்களிலும், மேலும் கடலோர பகுதிகளிலும், காரைக்கால், புதுவை போன்ற பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top