மக்களே ரேஷன் கடை பற்றி சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு..! இனி இந்த விதிமுறைகளை பின்பற்றனுமாம்…

A new announcement about people's ration shop Lets follow these rules-New Announcement ON Ration Shop

தமிழக அரசு பொதுமக்களின் நலுனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ரேஷன் அட்டை மூலம் மலிவான விலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இதில், அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்கள் குறைவான விலையில் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் சுமார் 33 ஆயிரத்து 222 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நியாயவிலை கடைகள் மூலம் சுமார் 1 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரத்து 93 பேர் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு ஒரு அறிக்கை விடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நியாய விலைகடையில் இருப்பு வைத்துகொண்டு மக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யாமல் இருக்கக்கூடாது. விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் நியாயவிலை கடையினை காலை 9 மணிக்கு திறக்க வேண்டும் அதனை வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் திறக்கப்படாத நியாயவிலை கடைகள் குறித்து புகார்களை வட்ட வழங்கல் அலுவலர்களிடம் பொதுமக்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here