சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு..! என்னென்னு தெரியுமா?

A new announcement released by the Department of School Education You know what watch it immediately

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் வருடந்தோறும் மே மாத விடுமுறையின்போது ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த கலந்தாய்வானது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும்.

அதனையடுத்து கடந்த மே 8 ஆம் தேதி சென்ற கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வானது நடைபெற இருந்தது. ஆனால் நிர்வாக காரணமாக அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றமானது மாறுதல் கலந்தாய்வுக் குறித்த தேதியானது பிறகு தெரிவிக்கப்படும் என கடந்த மே-4 அன்று உத்தரவிட்டது. ஆனால் பள்ளிக் கல்வித்துறையானது தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி என ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தது.

இந்த சூழ்நிலைகளில் பள்ளிக்கல்வித்துறையானது ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்திருக்கிறது. அதாவது வருகிற மே-15 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்ததான கலந்தாய்வு நடத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாது ஏற்கனவே இந்த கலந்தாய்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் தற்காலிகமாக ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான புதிய தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN