புதிதாக உருவாகிறது காற்றழுத்த தாழ்வுபகுதி…! மீண்டும் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்

A new low pressure area is forming Rain again-Rain Information

பருவமழை தொடக்கம் என்பது ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடங்கும். இந்நிலையில் இந்த ஆண்டும் பருவமழை தொடக்கம் கடந்த அக்டோபர் மாதம் முதலே தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதலே தமிழகத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

இந்நிலையில், கேரள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி நிலவுவதால் தமிழகத்தில் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தென் தமிழகம், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 4 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்த வரை சென்னை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வருகிற 5 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here