நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! மீண்டும் கன மழை எச்சரிக்கை!

0
A new low pressure area will form tomorrow Heavy rain warning again-Rain Information

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு – கேரள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 17ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது புதிய அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் நாளை வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, வருகிற 19 ஆம் தேதி கன மழைக்கு வாய்ப்பு எனவும் தற்பொழுது புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி தீவிரமடையும் என்பதால் அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here