சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..! உடனே பாருங்க..

A new notification released by the Tamil Nadu government Look now

காவல் நிலையத்தில் உயிரழந்தவர்களுக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், காவல் நிலையத்தில் விசாரனையின் போது ஏற்படும் மரணத்திற்கு இதுவரை தமிழக அரசு சார்பில், ரூ. 5 லட்சம் வழங்கபட்டது. இந்நிலையில், இதற்கான இழப்பீட்டு தொகையை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 7.5 லட்சத்திற்கு உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது.

காவல் நிலையங்களில் விசாரணையின் போதோ அல்லது காவலர்களால் துப்பாக்கி சூடு நடத்தும் போதோ அல்லது சந்தேகத்தின் பேரில் அவர்களை காவல் நிலையங்களுக்கு அலுத்து சென்று விசாரணை நடத்தும் போதோ அவர்கள் உயிரிழந்து விட்டால் அவர்களுக்கு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 7.5 லட்சமாக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையின் போது காவலர்களால் உடல் துன்புறத்தலுக்கு ஆளானவர்களுக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமால்லாமல் ஒரு குற்றவாளியை காவல் நிலையம் அழைத்து வராமல், வேறு ஒரு இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதன் விளைவாக நிகழும் மரணமும் காவல் மரணம்தான் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL.IN