மக்களை அச்சுறுத்தும் புதிய வைரஸ்..! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பொதுச் சுகாதாரத்துறை..

A new virus that threatens people Public Health Department issued guidelines

தமிழகத்தில்பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு இடங்களில் இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சலானது நான்கு நாட்களுக்கு தொடர்ந்து அதீத காய்சலையும், தொண்டைவலி, இருமல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வேகமாக பரவும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு மருத்துவமணைக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர்.

இந்த வைரஸ் காய்ச்சலானது 7 நாள்களுக்கு அதிக தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சல் பரவலை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும் மற்றும் இந்த வைரஸ் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி,

1. சாதரணமான காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் தங்களின் வீட்டிலேயே தனிமை படுத்திகொள்வது நல்லது.

2. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டால் மருத்துவரை அணுகி அவர் கூறும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

3. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மூச்சி விடுவதற்கு சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

4. மேலும், இந்த வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்பொழுது முககவசம் அணிய வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL.IN