மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! எல்பிஜி சிலிண்டர் விலை ரூ 115 குறைப்பு இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளுங்கள்!

A pleasant surprise for people Rs 115 reduction in LPG cylinder price Avail this opportunity now-LPG Cylinder Price Details

எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்பொழுது அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்பில், எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலையில் மட்டுமே மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது எனவும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.115 வரை குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர் விலையை ஒவ்வொறு மாதத்தின் முதல் தேதியில் இந்திய எரிவாயு நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிறனர். வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்கள் ஹோட்டல்கள் மற்றும் உணவு கடைகளில் பயன்படுத்தப்படுகின்றனர். அரசின் தற்போதைய இந்த விலை குறைப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், இந்தியாவில் அக்டோபர் முதல் பாதியில் பண்டிகைக் காலத்தின் காரணமாக பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை எந்தெந்த ஊரில் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது பற்றி இதில் பார்க்கலாம்.

1. சென்னையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் பழைய விலை ரூ.2009.50

2. சென்னையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை ரூ.1893.

3.19 கிலோ எடையுள்ள இண்டேன் எல்பிஜி சிலிண்டரின் பழைய விலை ரூ.1859.5

4. 19 கிலோ எடையுள்ள இண்டேன் எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை ரூ.1744

5. கொல்கத்தாவில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் பழைய விலை ரூ.1995.50

6. கொல்கத்தாவில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை ரூ.1846

7. மும்பையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் பழைய விலை ரூ.1844

8. மும்பையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை ரூ.1696

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here